மகளிடம் பாலியல் சில்மிஷம் செய்த நபர்! புலி போல் சீறிய தாய்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

மகளிடம் சில்மிஷம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


மும்பை குர்லா பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குர்லா ரயில் நிலையம் அருகே வசித்து வரும் பெண் ஒருவர், தனது 4 வயது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை என கண்டறிந்துள்ளார். வெளியில் விளையாடச் சென்ற அந்த சிறுமி, தவறுதலாக, குர்லா ரயில் நிலையம் உள்ளே சென்றுவிட்டார்.

அங்கே வந்த மர்ம நபர் ஒருவர், அந்த சிறுமியை தனது மடியில் அமர வைத்தபடி, சில்மிஷம் செய்திருக்கிறார்.  இதை, அந்த சிறுமியின் தாய் தொலைவில் இருந்தே பார்த்துவிட்டு, விரைவாக ஓடி, அந்த நபரை பிடித்துள்ளார்.  புலி போல் சீறி அந்த நபரை தாக்கியுள்ளார். ஆனால், அவர் தப்பியோடிவிட்டார்.

இதன்பேரில், அந்த பெண் போலீசில் புகார் அளிக்க, அவர்கள் சம்பந்தப்பட்ட நபரை தேடிப் பிடித்து கைது செய்தனர். பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை பெண்மணி ஒருவர் புலி போல் சீறியது குறிப்பிடத்தக்கது.