நாஸாவுக்குப் போகும் மதுரை டீக்கடைக்காரர் மகள்! சாதனைக்கு வறுமை தடை இல்லையே!

மதுரையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் ஜாகிர் உசேனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் தண்யா தஸ்னம் அக்டோபரில் அமெரிக்க வின் வெளி ஆராய்ச்சி மையமான நாஸாவுக்குப் போகிறார்.


Go4guru என்கிற அமெரிக்க கல்வி பயிற்சி நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஆண்டு தோறும் ஒரு அறிவியல் போட்டி நடத்தி அதில் வெற்றிபெறும் மாணவர்களை நாஸாவுக்கு அறிவியல் சுற்றுலாவாக அழைத்துச் சொல்கிறது.

அந்த நிறுவனம் இந்த ஆண்டு நடத்திய போட்டியில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.அவர்களில் மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் இருக்கும் ஜிண்டால் வித்யா மந்திர் பள்ளி மாணவன் அபிஷேக் ஷர்மா ,

ஆந்திர மாநிலம் குண்ட்டூரில் உள்ள பாஷ்யம் குழும பள்ளி மாணவி சாய் புஜிதா,மதுரை காந்தி மாண்டிசோரி பள்ளி மாணவி தண்யா தஸ்னம் ஆகியோர் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டு உள்ளனர்.

எதிர் காலத்தில் ஒரு விஞ்ஞானி ஆவதே லட்சியம் என்று சொல்லும் தண்யாவின் தந்தை ஜாபர் ஹூசைன் மதுரையில் டீக்கடை நடத்துகிறார்,தாய் சிக்கந்தர் ஜாஃபர் தண்யா படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்.

சாய் புஜிதா,அபிஷேக் ஷர்மா,தண்யா தஸ்னம் மூவரையும் go4guru நிறுவனம் அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப் போவதாக அறிவித்து இருக்கிறது.