மனநலம் பாதித்த தாய்! ஏழ்மை! படித்துக் கொண்டே வேலை! நாசா வைத்த தேர்வில் வெற்றி பெற்று அமெரிக்கா செல்லும் மதுரை மாணவி!

ஆன்லைன் போட்டியில் வெற்றி பெற்று நாசாவிற்கு செல்லும் வாய்ப்பினைப் பெற்ற தமிழகத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின் சாதனையை அனைவரும்பாராட்டி வருகின்றனர்.


தமிழகத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியான ஜெயலட்சுமி ஆன்லைன் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் வென்று இந்திய விண்வெளி நிறுவனமான நாசா விற்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய பல்வேறு சமூக ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

ஜெயலட்சுமி ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் இவரது சிறு வயதிலேயே தந்தை இவர்களை விட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் ஜெயலட்சுமி மட்டும்தான் வீட்டில் வேலைக்கு சென்று தனது மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் தம்பியையும் பார்த்து வந்துள்ளார். தனது பள்ளி முடிந்து மாலை வேளையில் இவர் முந்திரி பருப்புகளை விற்றும் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்த வருமானத்தை வைத்து தனது தாயின் மருத்துவ செலவு மற்றும் தம்பியின் பள்ளி செலவு வீட்டு செலவு அனைத்தையும் சொற்ப வருமானத்தை வைத்து பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து வந்துள்ளது .

இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோ 4 குரு ஏற்பாடு செய்த போட்டியைப் பற்றி பேசும்போது தற்செயலாக போட்டியைப் பற்றி அறிந்து கொண்டதாகவும் இப்போது அதை நினைத்து மிகவும் உற்சாகமாக இருப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் இதைப்பற்றி அவர் கூறுகையில்நான் ஒரு கேரம் போட்டிக்கு பயிற்சி மேற்கொண்டபோது பலகை அருகே கிடந்த ஒரு செய்தித்தாளைக் கண்டேன்.

அதில் கடந்த ஆண்டு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்பை வென்ற தன்யா தஸ்னெம் பற்றிய கதை இருந்தது. உடனடியாக நான் அதில் பங்கு பெற வேண்டும் என்று முடிவு செய்து அதற்காக பதிவு செய்தேன் என கூறியுள்ளார். ஜெயலட்சுமி பள்ளியிலும் நன்றாக படிப்பவர் என பள்ளி தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார் ஆனால் அவளுக்கு உதவ யாரும் இதுவரை முன்வரவில்லை எனவும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களால் முடிந்த உதவியை அவளது செய்து வந்துள்ளதாகவும் ஆசிரியர் தெரிவித்துள்ளார். மேலும் விளையாட்டிலும் ஜெயலட்சுமிக்கு மிகுந்த ஆர்வம் உள்ளதாகவும் அதில் தனது திறமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஜெயலட்சுமி ஆன்லைன் தேர்வு மூலம் வெற்றி பெற்றது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளதாகவும் அவரது தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.ஜெயலட்சுமியின் பயணத்திற்கு கிட்டதட்ட 2 லட்ச ருபாய் வரை செலவாகும் எனவும் அவரின் தந்தை தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தையும் இவர்களது குடும்பத்திற்கு எந்த ஒரு பண உதவியும் செய்ததில்லை எப்போதாவது இவர்களுக்கு பணம் அனுப்புவார். இவரது நண்பர்களும், ஆசிரியர்களும் பாஸ்போர்ட் பெற இவருக்கு உதவியுள்ளனர். பாஸ்போர்ட் அதிகாரியும் ஜெயலட்சுமிக்கு 500 கொடுத்து உதவியுள்ளார்.மேலும் ஜெயலட்சுமி தனக்கு உதவுமாறு கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஜெயலட்சுமியின் பயணம் மற்ற அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும். இந்நிலையில் தனது சாதனை முயற்சி அரசு பள்ளி மாணவர்கள் அனைவரையும் ஊக்குவிப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். ஜெயலட்சுமியின் வெற்றி குறித்து அவரது பள்ளி முதல்வர் கூறுகையில் ஜெயலட்சுமி மிகவும் திறமையான பெண் மற்றும் பல போட்டிகளில் வென்று வருகிறார். வானமே அவளுக்கு எல்லை" என்று கூறினார். நாசா நடத்திய போட்டியில் வென்ற ஒருசில மாணவர்களில் இவரும் ஒருவர். வெற்றியாளர்களுக்கு நாசாவின் முழு சுற்றுப்பயணமும் வழங்கப்படும் மேலும் அவர்கள் விண்வெளி வீரர்களுடன் உரையாடுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.