ஓட்டு கேட்டு பள்ளிவாசலுக்கு சென்ற செல்லூர் ராஜு! ஓட ஓட விரட்டிய முஸ்லீம்கள்!

டாடி மோடியுடன் கூட்டணி சேர்ந்த காரணத்தால் இதுவரை அ.தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்துவந்த இஸ்லாம் மக்கள் முதன்முறையாக மாற்று கட்சிக்குப் போகிறார்கள்.


மீண்டும் ஒரு முறை மோடி தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலைமை ஏற்படும், ராமஜென்ம பூமி என்ற பெயரில் இந்தியா முழுவதும் கலவரம் கட்டவிழ்த்துவிடப்படும் என்ற பயம் இருக்கிறது. அதனால் யாரும் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக இல்லை. அதனால்தான் முஸ்லீம்கள் இருக்கும் தெருவுக்கு பிரசாரம் மேற்கொள்ளும் எடப்பாடி கூட, மோடி பெயரைச் சொல்வதில்லை. 

ஆனால், நமது மதுரை விஞ்ஞானியும் தமிழக அமைச்சருமான செல்லூர் ராஜு, இஸ்லாம் மக்களை நான் சமாதானப்படுத்துகிறேன் என்று கிளம்பினார்.

அதிமுக மதுரை பாராளுமன்ற உறுப்பினர் ராஜ் சத்யனுக்கு ஆதரவு கேட்டு மதுரை கோ.புதூர் ஜமாத் பள்ளி வாசலுக்குச் சென்றார் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு. அவருடன் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா  உள்ளிட்ட அதிமுகவினரும் சென்றனர்.

இவர்களை பார்த்ததும் பள்ளிவாசலில் தொழுகையில் இருந்தவர்கள் பதறிப்போய் எழுந்து எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டு விரட்டியடிக்கவே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

அடுத்து, இஸ்லாமியர்களை மயக்க என்ன திட்டம் போடப்போறாரோ நம்ம செல்லூர் ராஜு..?