1000 ரூபாய் பணத்துக்காக நர்ஸ் செய்த மோசமான செயல்! பிறகு அவர் வாழ்வில் அரங்கோறிய விபரீதம்! மதுரை சம்பவம்!

மதுரையில் புதிதாக பிறந்த குழந்தையை உடனடியாக உறவினர்களிடம் காண்பிக்க பணம் வாங்கிய உதவி செவிலியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டார்.


பொதுவாக அரசு மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளிடமும், உறவினர்களிடமும் செவிலியர்கள், உதவியாளர்கள் என எல்லோரும் பணம் கேட்டு நச்சரிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்க அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் தனிமனிதன் திருந்தாதவரை நாட்டை திருத்தமுடியாது என்பதுபோல் இதுபோன்ற சம்பவங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பிறந்த குழந்தையின் பாலினத்தை சொல்வதற்கு பணம் கேட்கிறார்கள். ஆண் குழந்தையாக இருந்தால் ஒரு தொகை, பெண் குழந்தையாக இருந்தால் ஒரு தொகை, குழந்தையை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக காண்பிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தொகை என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  

மதுரையை அடுத்த பரவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை அந்த பெண்ணின் உறவினரிடம் காட்ட உதவி செவிலியர் கார்த்திகா ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனிக்கொடி அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனை முதல்வர் சங்குமணி நடத்திய விசாரணையில் கார்த்திகா லஞ்சம் பெற்றது உறுதி ஆனது.

பின்னர் நவம்பர் 18ஆம் தேதி உதவி செவிலியர் கார்த்திகா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகா நேற்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக ஒரு குழந்தை பிறந்த உடன் வீட்டில் யராவது இறந்துவிட்டால், என்ன குழந்தையோ வந்தவுடன் குடும்பத்துல ஒருத்தர முழுங்கிடுச்சு என்பார்கள். இந்தக் குழந்தைக்கு என்ன சொல்வார்களோ?