ஓயாமல் அழைக்கும் அரசியல் வாரிசு! அக்கட தேசத்தில் தஞ்சம் அடைந்த மதுரை பொன்னு நடிகை!

அரசியல் வாரிசு ஒருவரின் தொல்லை தாங்க முடியாமல் மதுரையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஒருவர் தமிழ் படங்களே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம்.


முதல் படத்தில் இந்த நடிகை நடித்த நடிப்பை பார்த்து வாய் பிளந்த அரசியல் வாரிசு அடுத்த படத்திலேயே ஒப்பந்தம் செய்தார். இதன் பிறகு இருவரும் நெருங்கிய நட்புடன் பழக ஆரம்பித்தனர். 

அரசியல் வாரிசுடன் நெருங்கியதால் மதுரை பொன்னு நடிகையை அழைக்க பிற தயாரிப்பாளர்களும், கதநாயகர்களும் தயக்கம் காட்டினர். எவ்வளவோ முயன்றும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே அதன் பிறகு நடிக்க முடிந்தது. பிறகு கெஞ்சி கூத்தாடி மேலும் ஒரு படத்தில் நடித்தார் அந்த மதுரை பொன்னு.

அதன் பிறகு தமிழில் எவ்வளவோ முயன்றும் ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. விசாரித்த போது தான் பின்னணியில் வாரிசு இருப்பது தெரியவந்தது. வாரிசு தன்னை கட்டுப்படுத்த நினைப்பதை உணர்ந்த அவர் உடனடியாக தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தினார்.

கை  மேல் பலனாக படங்கள் குவிய ஆரம்பித்தது. இந்த நிலையில் வாரிசு தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பாகிவிட மறந்திருப்பால் என்று மீண்டும் தமிழ்நாடு பக்கம் வந்தவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நடிகையின் வரவை அறிந்த வாரிசு மீண்டும் அழைக்க கிளி பிடித்துவிட்டதாம் அவருக்கு.

விட்டால் போதும் என்று ஆந்திரா சென்றவர் அங்கேயே வீடு எடுத்து செட்டில் ஆகிவிட்டார். தமிழ் படங்களில் நடிக்க இரவோடு இரவாக வரும் அவர் இரவே ஐதராபாத் திரும்பிவிடுகிறாராம்.