வெவ்வேறு மதம்! மதுரை காதல் ஜோடிக்கு பர்கூரில் ஏற்பட்ட விபரீதம்!

மதுரையில் இரு வேறு மதத்தினை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடி கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர்.


மதுரை, மீனாட்சிபுரம் முனியாண்டி கோவில் பகுதியை  சேர்ந்த ஷாஜிதா. அதேப் பகுதியில் ஒரு பேக்கரி கடையில்  வேலை பார்த்து வந்துள்ளார் .அந்த கடையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆனந்தன் (வயது 27)  வேலை செய்து வர, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர்.

கடந்த 6 மாதமாக காதலித்து வந்த இருவரும்  வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் எனினும் ஆனந்த்தின் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 14 ஆம் தேதி அன்று பர்கூர் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஷாஜிதா, வீட்டை விட்டு வெளியேறும் போதே தான் காதலித்த நபரை திருமணம் செய்துக்கொள்ள போவதாகவும், தன்னை தேட வேண்டாம் எனவும் பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தற்போது தனது பெற்றோர் மதுரை காவல் நிலையத்தில் என்னை காணவில்லை என புகார் அளித்துள்ளதாக கூறியவர்.

இதுக்குறித்து,போலீசார் கிருஷ்ணகிரி வரை வந்து விசாரணை நடத்தியதாகவும், மேலும் மதுரைக்கு வர சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மதுரைக்கு சென்றால் எங்களை பெற்றோர் பிரித்துவிடுவார்கள் எனவும் அவர்களிடம் இருந்து தக்க பாதுகாப்பு வேண்டியும் இருவரும் நேற்று கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் 

இது தொடர்பாக பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.