நகைக்கடையில் 7 சவரன் நெக்லஸை அபேஸ் செய்த கேடி பெண்மணி..! மதுரை அலர்ட்

மதுரையில் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் நகை வாங்குவது போல் வந்து கடைக்காரர் உள்ளே சென்ற நிலையில் அங்குள்ள நெக்லசை திருடிச் சென்றுள்ளார். சிசிடிவி கேமராவில் பதிவாகி காட்சிகளை வைத்த நகையை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


மதுரை தெற்கு ஆவணி பகுதியில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு நகை வாங்க ஜெயக்குமார் என்பவரின் கடைக்கு வந்துள்ளார். இந்நிலையில் நகைகளை எடுக்க நகைக்கடை உரிமையாளர் ஜெயகுமார் உள்ளே சென்றபோது அந்தப் பெண் முன்னே கண்ணாடி பெட்டியில் இருந்த சுமார் 7 சவரன் நெக்லஸை எடுத்து தனது பையில் போட்டுக்கொண்டு கடைக்காரர் வெளியே வருவதற்கு முன்னர் அங்கிருந்து வேகமாக சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெயகுமார் வெளியே வந்து பார்த்த போது அப்பெண் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ந்தார். இதையடுத்து கடையில் ஏதேனும் திருட்டு போய்விட்டதா என பார்த்தபோது கண்ணாடிப் பெட்டிக்குள் இருந்த நெக்லஸை திருடிச் செல்வதை உறுதி செய்தார்.

பின்னர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . காவல்துறையினர் வருவதற்கு முன்னே கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சியை பார்த்துள்ளார். அப்போது அப்பெண் நெக்லஸை எடுத்து பையில் போட்டுக்கொண்டு சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் சிசிடிவி கேமரா காட்சியில் பதிவாகிய அப்பெண்ணின் புகைப்படத்தை வைத்து அப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.