தலித் பெண்கள் எல்லாம் அப்படி பட்டவங்க தான்..! ஆபாச அவதூறு வீடியோ..! நெல்லையில் தேவர் சமுதாய பெண் அதிரடி கைது!

மதுரை: டிக்டொக் மொபைல் ஆப்பில் வெறுக்கத்தக்க வீடியோவை பரப்பிய புகாரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி. சுதா (31 வயது). தேவர் சமூகத்தைச் சேர்ந்த இவர், தலித்  சமூகத்தை இழிவுபடுத்தி, இரு சமூகத்தினர் இடையே வெறுப்பூட்டும் வகையில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். டிக்டொக் செயலியில் பகிரப்பட்ட இந்த வீடியோ கடந்த சில மாதங்களாக, மிக வைரலாக பரவி வருகிறது 

இதன்பேரில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மணிகண்டன் (29 வயது) என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் செய்தார். தகாத வார்த்தைகளில் பட்டியலின பெண்களை ஏசுவதோடு, அரசின் இட ஒதுக்கீடு கொள்கையையும் கடுமையான வார்த்தைகளால் அப்பெண் விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  

இதையடுத்து புகாரை ஏற்றுக் கொண்ட தூத்துக்குடி வடக்கு போலீசார், சம்பந்தப்பட்ட பெண் மீது சமூக வெறுப்புணர்வை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர். தற்போது அந்த பெண் நீதிமன்ற காவலில், திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.