தூக்க கலக்கத்தில் ரயிலில் இருந்து இறங்கும்போது சக்கரத்திற்கு இடையில் விழுந்த பெண்... அடுத்துநடந்த ஒரு மணி நேர உயிர் போராட்டம்

மதுரை ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி ரயில் நடுவில் மாட்டிக் கொண்ட பெண்ணை ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பெண்ணை உயிருடன் மீட்டுள்ளனர்.


இன்று காலை சென்னை -கொல்லம் வரை இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மதுரை ஜங்ஷனுக்கு வந்தது.அதில் மதுரையைச் சேர்ந்த பூர்ணிமா என்ற பெண் பயணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை ஜங்ஷன் வந்ததும் அவர் இறங்கும் நிலையத்தில் தூக்க கலக்கத்தில் இருந்ததால் படியில் இறங்கும் போது கால் தவறி ரயிலுக்கு அடியில் மாட்டிக்கொண்டார்.

இந்நிலையில் அருகில் வந்தவர்கள் உடனே அதிர்ச்சி அடைந்த அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.ரயிலில் இருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்துள்ளனர் இந்நிலையில் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அப்பெண் ரயிலுக்கு அடியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது இந்நிலையில் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார் .இதன் காரணமாக அவ்வழியே வந்த ரயில்கள் அனைத்தும் சுமார் 1 முதல் 2 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது.