கையில் கத்தி..! முகத்தில் வெறி..! மாமனாரை நடுரோட்டில் துடிக்க துடிக்க குத்திய மருமகன்! மதுரை சம்பவம்..!

மதுரையில் குடிபோதையில் மாமனாரை கொடூரமாக கொலை செய்த மருமகன் மாமியார் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். மன்னிக்கவும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.


மேலூர் அருகே அலங்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கையா என்பவரின் மகள் தனலட்சுமிக்கும், நல்லமணி என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக தனலட்சுமி-நல்லமணி தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவாகரத்து கேட்டு மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் இருவருமே மனு தாக்கல் செய்துள்ளனர். 

இந்நிலையில் மகள் விவகாரத்து வழக்கு விசாரணைக்காக இன்று காலை மேலூர் பேருந்து நிலையம் அருகே வந்த தங்கையா நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மதுபோதையில் வந்த மருமகன் நல்லமணி தங்கைய்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரும் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் தங்கைய்யாவை சரமாரியாக குத்தினார். மருமகன் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த தங்கையா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். நல்லமணி கொலை செய்ததை பார்த்த பொதுமக்கள் அவரை பிடித்துக்கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் தங்கையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாமனார் தங்கைய்யாவை கொலை செய்த மருமகன் நல்லமணியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தந்தையையும் இழந்து கணவரும் சிறைக்கு செல்லும் நிலையில் எதிர்காலத்தை பற்றி வேதனைப்படுகிறார் நல்லமணியின் மனைவி தனலட்சுமி.