கற்பழிப்பு அல்ல..! விருப்பத்துடன் தான் உறவு வைத்திருந்தீர்கள்..! முகிலன் பாலியல் வழக்கில் வெளியான அடுத்த அதிரடி!

மதுரை: பாலியல் பலாத்கார வழக்கில் முகிலனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.


தமிழகத்தைச் சேர்ந்தவர் முகிலன், சமூக ஆர்வலரான இவர் சில மாதங்களுக்கு முன்பாக தலைமறைவானார். அவரை யாரோ கடத்திவிட்டதாகக் கூறிய நிலையில், அவர் திடீரென திருப்பதி அருகே போலீசாரிடம் சிக்கினார்.

அவர் மீது ஏற்கனவே கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்ந்திருந்தார். இதன்பேரில் அவரை போலீசார் தேடிவந்தபோதுதான் அவர் தலைமறைவாகிவிட்டார்.   

பிறகு ஆந்திராவில் பிடிப்பட்ட அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் முகிலனுக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. அதேசமயம், அவரை தமிழக போலீசார் ஆள்வைத்து கடத்தி, தலைமறைவாக வைத்திருந்தனர் என்ற வாதத்தை ஏற்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அமர்வு மறுத்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.