ஆன்லைன் ரம்மி! கோடிகளை இழந்த காதல் தம்பதி! தூக்கில் தொங்கிய விபரீதம்!

மதுரையைச் சேர்ந்த தம்பதி இருவர் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 மதுரை மாவட்டத்தில் உள்ள நாகமலை என்ற பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்பிரமணியன் (41). ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவருக்கும், அவரது மாணவியான மதுரையைச் சேர்ந்த பட்டு மீனாட்சி (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் இருவரின் பெற்றோர்களின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டனர்.

வெங்கட சுப்ரமணியன் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்து விட்டு தனது வீட்டில் இருந்தபடியே டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்துள்ளார்.  இதையடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஆன்லைன் மூலம் பல்வேறு கோயில் தங்களது பணத்தை முதலீடு செய்து வந்துள்ளனர். 

ஆன்லைன் மூலம் விளையாடும் ரம்மி என்னும் சீட்டுக்கட்டு விளையாட்டில் இருவரும் அதிக ஆர்வம் செலுத்தி விளையாடி வந்துள்ளனர் இதன்மூலம் அவர்களுக்கு அதிக தொகையும் பரிசாக கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியில் அவர்களது வீட்டின் அருகே சென்ற போது வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது உடனே இது குறித்து அருகில் உள்ள காவல் துறையினரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். அப்போ வரும் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்துள்ளனர்.

இதையடுத்து மொட்டைமாடியில் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்களது உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ளவர்களிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் பொதுமக்கள் கூறியதாவது : ஆன்லைன் ரம்மி மூலம்  அதிக பணம் பெற்று மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம் என்று அக்கம் பக்கத்தினர் கூறினர். ஒரு தரப்பினர்

 இவர்களுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் அக்கம் பக்கத்து வீட்டார் போலீஸார் விசாரணையில் தெரிவித்தனர். நாகமலை தம்பதிகள் மரணம் தொடர்பாக அவர்கள் வசித்து வந்த வீட்டில் கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றிய போலீஸார், இந்த மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.