ஓரினச் சேர்க்கை கதை! விஷம் குடித்து உயிரை விட்ட நண்பர்கள்! மதுரையில் சில்லிட வைக்கும் சம்பவம்!

மதுரையில் மாணவர்கள் 2 பேர் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரையில் உள்ள சில தனியார் கல்லூரிகளில், ராக்கிங் பிரச்னை அவ்வப்போது நடப்பது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி பற்றி போலீசாருக்கு புகார் வந்தவண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில், அங்கு முத்துப்பாண்டி மற்றும் பரத் ஆகியோர் பொருளியல் முதலாம் ஆண்டு படித்து வந்தனர்.

இவர்கள் 2பேரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், சக மாணவர்கள், இந்த 2 பேரையும் அவ்வப்போது கேலி செய்து வந்துள்ளனர். குறிப்பாக, திருப்புவனத்தைச் சேர்ந்த மாணவன் ஜெயசக்தி உள்ளிட்ட சிலர், முத்துப்பாண்டி, பரத்தை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்துள்ளனர். பரத் பார்ப்பதற்கு சற்று பெண் தன்மை உடையவர் போல் இருப்பார்.

இதனால் பரத்தையும் - முத்துப்பாண்டியையும் இணைத்து ஓரினச்சேர்க்கை கதைகளை கட்டிவிட்டுள்ளனர் சக மாணவர்கள். இதனால், மனம் உடைந்த மாணவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் 2ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பரத் கடந்த 4 நாளுக்கு முன்பு இறந்துவிட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்துப்பாண்டியும் இன்று உயிரிழந்துவிட்டார். இதையடுத்து, மாணவர்களின் சாவுக்கு காரணமான ஜெயசக்தி என்ற மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.