மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டதற்கு என்ன காரணம் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
தகுதி, திறமைக்கு அரசுப் பணி கொடுத்த கலெக்டர்! தூக்கி அடித்து எடப்பாடி! IAS அதிகாரிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

மதுரை நாடாளுமன்ற தேர்தல், திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத் தேர்தல் உள்ளிட்டவை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதிரடியாக இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மதுரை நாடாளுமன்ற தேர்தலில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பெண் தாசில்தார், 4 ஊழியர்களுடன் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின்பேரில், ஆட்சியர் நாகராஜை மாற்றும்படி பலரும் வலியுறுத்தினார்கள்.
இதன்பேரில் எதிர்க்கட்சிகள் சார்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில்தான், தற்போது நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தகவல் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அவர் தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இது மட்டுமே உண்மை இல்லை.
ஆம், சமீபத்தில் நடந்த அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக அவர் நடந்துகொள்ளவில்லை என்றும், இதன்பேரிலேயே திடீரென நாகராஜன் இடம் மாறுதல் செய்யப்பட்டதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. என்ன நடந்தது என்பது அந்த 'பழனி' முருகனுக்கே வெளிச்சம்.
இதனிடையே நாகராஜ் ஐஏஎஸ் தேர்வில் முதல் ரேங்கில் தேர்ச்சி பெற்றவர் என்றும் அங்கன்வாடி பணியாளர்களை தகுதியின் அடிப்படையில் இரவோடு இரவாக நியமித்ததாகவும் இதனால் பாதிக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகள் முதலமைச்சர் மூலமாக அவரை மாற்றியதாக கூறப்படுகிறது.