தினமும் எனக்கு போதை ஊசி செலுத்துகிறார்..! சித்ரவதை செய்கிறார்..! பாஜக EX எம்எல்ஏ மீது மகள் கூறிய பகீர் புகார்! அதிர்ந்த மாநிலம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக முன்னாள் எம்எல்ஏ மகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் பரபரப்பு வீடியோ ஒன்றை பாஜக பிரமுகரின் மகள் வெளியிட்டுள்ளார்.


மத்தியப் பிரதேசம் போபாலை சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ சுரேந்தர்நாத் சிங், தன்னுடைய மகள் பாரதிசிங் காணாமல் போய்விட்டதாக அக்டோபர் 16-ம் தேதி கமலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  

இந்நிலையில் உள்ளூர் தொலைக்காட்சியில் சுரேந்தரின் மகள் திடிரென தோன்றி பேட்டி அளித்தார். அதில் தந்தை மீதும் குடும்பத்தார் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தான் விருப்பப் படி வாழ வீட்டை விட்டு வெளியேறியதாகவும், எம்.எல்.ஏ- மகனை திருமணம் செய்து வைக்க தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். விருப்பம் இல்லா திருமணத்திற்கு சம்மதிக்காத தனக்கு போதை ஊசி போட்டு வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் பரபரப்பா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

தினமும் தன்னை அடித்து துன்புறுத்தும் தன் குடும்பத்தார் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் என போலி மருத்துவச் சான்றிதழ் வாங்கியுள்ளனர். 10 வருடங்களாக சித்ரவதை அனுபவித்தது போதும் என்றும் தயவு செய்து தன்னை தொல்லை செய்ய வேண்டாம் எனவும் வேதனையுடன் பேசியுள்ளார்.

மேலும் தன்னுடைய உயிருக்கு உறவினர்களால் ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு தேவை என உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் எம்.எல்.ஏ சுரேந்தர்நாத் சிங் கூறுகையில் “என் மகள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குச் சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி, நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து தர வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இது ஒரு குற்றமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.