வலை வீசிய ஷிவானி! ஷாலினி! வசமாக சிக்க வைத்த ஹர்பஜன்! லேப்டாப் வீடியோவை பார்த்து அதிர்ந்த போலீஸ்!

மத்தியப்பிரதேச மாநிலத்தில் முக்கிய பிரமுகர்கள் உல்லாசமாக இருந்த வீடியோவை எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த 5 பெண்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பெறப்பட்ட வீடியோ ஆதாரங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்களுக்கு பாலியல் உறவுக்காக பெண்களை அனுப்பிவைத்து அதை வீடியோவாக பதிவு செய்து பிரபலங்களை மிரட்டிப் பணம் பறித்து வந்துள்ளதாக 5 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களிடமிருந்து பெறப்பட்ட வீடியோ ஆதாரத்தின் மூலம் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் இதில் தொடர்புடையதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தூர் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரியான ஹர்பஜன் சிங் என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நான் உல்லாசமாக இருந்த வீடியோவை பதிவு செய்து அதை காட்டி மிரட்டி என்னிடம் பெண்கள் சிலர் பணம் கேட்டு வந்துள்ளதாகவும் அதற்கு பயந்து நானும் பணம் கொடுத்து வந்தேன் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமார் 3 கோடி பணம் கேட்டு தன்னை மிரட்டுவதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் போலீசாரின் உதவியுடன் ஹர்பஜன் சிங் அந்த பெண்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அவர்கள் கூறும் இடத்திற்கு காவல்துறையின் உதவியுடன் சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இரு பெண்களை காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்தனர்.அவர்கள் ஷிவானி மற்றும் ப்ரீத்தி என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.மற்றும் இவர்களுடன் மேலும் மூன்று பெண்கள் தொடர்பில் இருப்பதை கண்டறிந்த போலீஸார் அவர்களையும் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில் இவர்கள் ஐந்து பேருமே தோழிகள் எனவும் மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்து அவர்களுக்கு பெண்களை அனுப்பி அவர்களுக்கே தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி அவர்களிடம் பணம் பெறுவதே இவர்களது நோக்கமாக இருந்தது இந்த பணத்தின் மூலம் ஐந்து பெண்களும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் லேப்டாப் போன்றவற்றை கைப்பற்றினர். அதில் சுமார் 13 வீடியோக்கள் உள்ளன. அதில் பல்வேறு முக்கிய பிரமுகர்களின் அந்தரங்க வீடியோக்கள் அடங்கும். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.