மது..! மாது..! இரவு விடுதி அழகிகள்..! ஒரே ஒரு இரவுக்கு 8 கோடி ரூபாய் செலவு செய்த முதலமைச்சரின் உறவுக்கார இளைஞர்!

வங்கிக் கடன் மோசடியில் கைதான மத்திய பிரதே முதல்வரின் உறவினர் அமெரிக்க விடுதி ஒன்றில் ஒரே நாளில் 8 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


வங்கிக் கடன் மோசடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேசத்தின் முதல்வருமான கமல்நாத்தின் சகோதரி மகன் ரதுல்பூரி ரூ.354 கோடி வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

மோசர் பேர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் செயல் அதிகாரியாக இருந்தபோது இவரும் சில இயக்குநர்களும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்த இவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. அதே சமயம் ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

இதுகுறித்து அமலாக்கத்துறை மேற்கொண்ட விசாரணையில் ஊழல் செய்த பணத்தி வெளிநாடுகளுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் புரோவாகேட்டர் விடுதியில் ஒரே இரவில் 8 கோடி ரூபாய் ஆடம்பரமாக செலவழித்துள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 நவம் முதல் 2016 வரை ரதுல் பூரியின் தனிப்பட்ட செலவு மட்டும் 32 கோடி ரூபாய் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரதுல் பூரியின் மொத்த வங்கிக் கடன் மோசடி 8,000 கோடி ரூபாய் அளவிற்கு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நிதி மோசடி செய்ய ஏதுவாக துணை நிறுவனங்களை உருவாக்கி அதில் மோசர் பேர்நிறுவனம் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்து மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.