தஞ்சை பூண்டி பேராலயத்தில் மாதா தலையில் கை வைத்த மர்ம நபர்! கிரீடம் மாயம்! தஞ்சை பரபரப்பு!

தஞ்சை மாவட்டத்தில் மாதா கோவில் ஒன்றில் சொரூபத்தில் இருந்த கிரிடம் மற்றும் 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கிறித்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தஞ்சை மாவட்டம் பூண்டியில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ போதகரான அருட்தந்தை வீரமாமுனிவரின் முயற்சியால் கட்டப்பட்டது.  

நேற்று முன்தினம் இரவு பங்குத்தந்தை பாக்கியசாமி திருப்பலி நடத்திய பின்னர் வழக்கம்போல் ஆலையின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இன்று காலை ஆலயத்தை திறந்து பார்த்தபோது பலிபீடத்தில் மாதா சொரூபம் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கதவுகளின் பூட்டிகள் உடைக்கப்பட்டது கண்டு காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மாதா சொரூபத்தில் இருந்த தங்க கிரீடம், தங்க முலாம் பூசப்பட்ட ஜெபமாலை, மாதாவின் கையில் அணிவித்திருந்த நெக்லெஸ் உள்ளிட்ட சுமார் 18 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது

இதை அடுத்து திருக்காட்டுப்பள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஆலயத்துக்கு வந்த ஆய்வாளர் கென்னடி விசாரணை மேற்கொண்டார். ஆலயத்தில் வைத்திருந்த சிசிடிவ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது

முகத்தை மூடியபடி வந்த மர்மநபர் ஒவ்வொரு கேமிராவை துணியால் மூடுவதும் சில கேமராக்களை திருப்பி வைப்பதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன. திருப்பலி முடிந்து ஆலய கதவுகள் மூடுவதற்கு முன்னரே மர்மநபர்கள் ஆலயத்துக்குள் பதுங்கி இருக்கலாம் என்றும் காலையில் ஆலை திறந்தவுடன் உடனடியாக அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

பிரசித்திப் பெற்ற பூண்டி மாதா பேராலயத்தில் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.