பா.ரஞ்சித்தை பிடிச்சு ஜெயில்ல போடுங்க எஜமான்! வந்துட்டாருய்யா மாரிதாஸ்!

உலகத்துக்கே நல்லவர் மாதிரி பிளாக் போர்டில் பாடம் நடத்தும் மாரிதாஸ், ஒரு பக்கா பா.ஜ.க. டிஜிட்டல் கூலி என்பதை இந்த உலகமே அறியும்.


அது இப்போது அம்பலப்பட்டு போனதால், நிஜ பா.ஜ.க. தலைவர் போன்றே குரல் எழுப்பத் தொடங்கிவிட்டார். ஆம், உடனே பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டுமாம், அவர் சொல்லும் காரணம் இதுதான். இயக்குனர் ரஞ்சித் அவர்களை கைது செய்வது தான் இங்கே இருக்கும் திரைத்துறையினருக்கு ஒரு பாடமாக அமையும். அவரை கைது செய்யத் தேவையான அனைத்து ஆதாரமும் அவர் பேச்சிலேயே இருக்கிறது. எனவே உடனடியாக கைது செய்வதுவே சரி.

அவர் மாட்டுக் கறி சார்ந்து பேசிய பேச்சைப் போல் பேசுவதை எந்த விதத்தில் சரி?. அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை மதிப்பளிக்கும் குணமே சரியானது. இங்கே பெரும்பான்மை சமூகமான இந்துக்களை அவமானம் செய்தால் அது பகுத்தறிவாக பேசிக்கொள்வதும் , சிறுபான்மையினர் நம்பிக்கை என்றால் அது மதிக்கப்பட வேண்டும் என்ற சொல்லப்படாத விதியை உருவாக்கியது திமுக திக கூட்டம் தான். இப்போது கொஞ்சம் அது எல்லை மீறிச் செல்கிறது இந்த திரைத்துறை கூட்டத்தால். ராஜ ராஜ சோழன் சார்ந்த ரஞ்சித் பேசிய வரலாறு எனக்குத் தெரிந்த வரை எங்கும் நான் படித்தது இல்லை. மோசம் என்ன வென்றால் அவருக்கதக்க விதமாக ஜாதியைக் கலவரம் தூண்டும் விதமாக அவர் பேசி இருக்கது மிக கண்டிக்கத்தக்கச் செயல் அதற்குக் கட்டாயம் கைது செய்யலாம்.

புத்தம் சார்ந்து அவர் முன்வைக்கும் தகவல்கள் முழுக்க முழுக்க கீழ்த்தரமான பிரிவினை வெறுப்பு அரசியல் தவிர வேறு இல்லை. அதிலும் ஆன்மீக புரிதலோ இல்லை சரியான ஆய்வு தகவல்களோ அவரிடம் இல்லை வெறும் வெறுப்பு பேச்சு மட்டுமே மேலோங்கி உள்ளது.
அவர் அனைத்து விதத்திலும் இங்கே சமூக அமைதியைக் கெடுக்கும் நோக்கத்தில் பேசி வருவதால் அவரை கைது செய்வது தான் சமூகத்திற்கு நல்லது அதுவே பலருக்குப் பாடமாக அமையும். எனவே தமிழக அரசு தாமதம் செய்யாது இயக்குநர் ரஞ்சித் அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.