தென் ஆப்ரிக்க அணியில் இருந்து முக்கிய பவுலர் நீக்கம்! இந்திய அணி உற்சாகம்!

தென்னாபிரிக்கா அணியின் இளம் வேக பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி 5ம் தேதி நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


பங்களாதேஷ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்து வீசும் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசினார். இதனால் தென்னாபிரிக்கா அணியின் பந்து வீச்சின் பலம் குறைந்தது. இதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட பங்களாதேஷ் அணி 330 ரன்களை குவித்து, தென்னாபிரிக்கா அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் லுங்கி நெகிடி  5ம் தேதி நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் விளையாடமாட்டார் என தெரிகிறது. அவருக்கு குறைந்தது ஒரு வாரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என அந்த அணியின் மருத்துவர் கூறியுள்ளார். மேலும் அவருக்கு நாளை ஸ்கேன் எடுக்கப்படவுள்ளதாகவும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சேர்  வீசிய பந்தில் காயம் அடைந்த ஹாசிம் ஆம்லா வேகமாக குணமடைந்து வருவதாகவும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடுவார் எனவும் அணியின் மருத்துவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தென்னாபிரிக்கா அணியின் வேக பந்து வீச்சாளர் டேல்  ஸ்டெய்ன் ஏற்கனவேய காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. வலை பயிற்சியிலும் பெரிதாக ஈடுபடவில்லை. ஆகவே லுங்கி நெகிடிக்கு பதிலாக டேல்  ஸ்டெய்ன் அணியில் இடம் பெற்றால் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.