ரூ.10 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட இளம் பெண் மாறி மாறி கற்பழிப்பு! பிறகு நேர்ந்த கொடூரம்!

ரூ.10,000க்கு விற்கப்பட்ட பெண்ணை பலர் கூட்டு சேர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம், ஹப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண், உள்ளூரைச் சேர்ந்த பலரிடம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதன்பேரில், கடனை திருப்பித் தராத அந்த பெண்ணை, கடன்கார்கள் ஒன்றுசேர்ந்து ஒரு நபரிடம் ரூ.10 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணின் தந்தையும் உடன்பட்டுள்ளார்.

பெண்ணை விலைக்கு வாங்கிச் சென்ற நபர், அவரது வீட்டில் வேலை செய்யும்படி சித்ரவதை செய்திருக்கிறார். அத்துடன், கடன்காரர்களுடன் சேர்ந்து கொண்டு, அந்த பெண்ணை அனைவரும் மாறி மாறி பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்கள். ஒருகட்டத்தில் மன உளைச்சல் அடைந்த அப்பெண், உடலில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயற்சித்தார்.

இதில், படுகாயம் அடைந்த அவர், காசியாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  தீவிர சிகிச்சை பெற்று வரும் அப்பெண் பற்றி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மகளிருக்கான டெல்லி ஆணையம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச போலீசார் தரப்பில் கூறும்போது, குறிப்பிட்ட பெண், ஏற்கனவே 2 முறை திருமணமாகிய நிலையில், ஊர் விட்டு ஊர் ஓடி வந்து, மூன்றாவதாக ஒரு நபரை சேர்த்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரது நடத்தையில் பலத்த சந்தேகம் உள்ளது. அவர் கண்டிப்பாக நடந்துகொள்ளாததால், மற்ற ஆண்கள் அவரை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர். இதுபற்றி விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம், எனக் குறிப்பிட்டுள்ளனர்.