இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் குணமடைந்த முதல் பெண்!

கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் மருத்துவர், கொரோனா சிகிச்சை பெற்று உத்திரப்பிரதேசத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.


கனடாவின் டொரண்டோவில் வசிக்கும் 35 வயதான இந்திய வம்சாவளி பெண் மருத்துவர் ஒருவர் மார்ச் 8ஆம் தேதி உத்திர பிரதேசத்தில் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் மற்றும் தொடர்ந்து இருமல் ஏற்படவே லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில்(KGMU) சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

சிகிச்சையில் COVID- 19(Corona virus disease 2019) கொரோனா தொற்று இருப்பதாக 11ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கொரோனா நோயாளி இவராவார்.இருப்பினும், மேலும் இரண்டு சிகிச்சை இப்போது மேற்கொள்ளப்பட்டு, அந்த இரண்டு அறிக்கைகளும் எதிர்மறையாக வந்த பிறகே அவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 

தீவிர சிகிச்சை பெற்ற அந்தப் பெண் மருத்துவர் குணமடைந்து நேற்று அவர் வீடு திரும்பினார். எனினும் அவர் 14 நாட்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

உத்திரப்பிர தேசத்தில் கடந்த சனிக்கிழமை அன்று 25 கொரோனா தொற்று நோயாளிகளில் 8 பேர் முழுவதுமாக குணமடைந்து இருப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.