லயோலா கருத்துக் கணிப்பு! தி.மு.க. ஜெயிக்கப்போகும் தொகுதிகள் இவைதான்! டென்ஷனில் எடப்பாடி !

தேர்தல் தோறும் லயோலா கல்லூரி பழைய மாணவர்களின் பண்பாடு மக்கள் தொடர்பகம் மூலம் கருத்துக்கணிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி 40 தொகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி வடசென்னை, தென்சென்னை, மத்தியசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தி.மு.க. எளிதில் வெற்றி பெறுகிறது. இதுதவிர வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருப்பூர், நாகப்பட்டினம், ராதநாதபுரம், தென்காசி ஆகிய தொகுதிகளிலும் சிரமப்பட்டு வெற்றிபெறும் வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளது. திருமாவளவன், பாரிவேந்தர், கொங்கு, ம.தி.மு.க. போன்ற கட்சிகளும் எளிதில் வெற்றி அடைகின்றன.

அந்த வகையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மயிலாடுதுறை, திருநெல்வேலி, கோவை என 3 தொகுதிகள் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு திருச்சி தொகுதி கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 18 சட்டமன்ற இடைத்தேர்தலைப் பொறுத்தவரை தி.மு.க.வுக்கு அதிகபட்சம் 11 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் அ.தி.மு.க.வுக்கு 3 தொகுதிகளும் அ.ம.மு.க.வுக்கு 4 இடங்களும் வெல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பு முழுக்க  முழுக்க தி.மு.க.வினர் செட்டப் என்று அ.தி.மு.க. கொந்தளித்த்து வருகிறது. சீக்கிரமா அ.தி.மு.க.வுக்கு சாதகமா ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடுங்கன்னு டென்ஷனில் இருக்கிறாராம்.