வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு போனா..! ஆனால் புதர் மறைவில்..! மகளை பறிகொடுத்த பெற்றோர் கண்ட காட்சி! ஈரோடு திகுதிகு!

ஈரோடு: காதலனும், காதலியும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடன் பணிபுரிந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாசோபாண்ட் பெகரா என்ற இளைஞரை சுகன்யா காதலிக்க தொடங்கியுள்ளார். இந்த காதலுக்கு, சுகன்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 30ம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே சென்ற சுகன்யா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதன்பேரில் அவரது பெற்றோர் சம்பந்தப்பட்ட மில் நிர்வாகத்திடம் விசாரித்தனர். அங்கும் அவர்களை காணவில்லை என தெரியவந்தது.  

இதையடுத்து, சுற்றுப்பகுதியில் தீவிரமாக தேடியபோது, பெருந்துறை சிப்காட்டை அடுத்த பாலிக்காட்டூர் வனப்பகுதியில் 2 பேர் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதை நேரில் சென்று பார்த்த சுகன்யாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ஆம், அவர்களின் மகள் அங்கே ஒரு மரத்தில் தூக்குப் போட்டு இறந்து கிடந்துள்ளார். அருகே உள்ள புதரில் காதலன் ஜாசோபாண்ட் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்தார். இருவரது சடலத்தையும் மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.