பேஸ்புக்கில் ஆபாச அவதூறு! உயிரை மாய்த்த காதலி! அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு!

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பேஸ்புக்கில் அவதூறு பதிவு போட்டதால், மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, காதலரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.


நெய்வேலி அருகே குறவன்குப்பத்தைச் சேர்ந்த நீலகண்டன்,  மகள் ராதிகா. அவரது அத்தை மகன் வடலூர் பார்வதிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் இருவரும் காதலித்து வந்ததால் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், குறவன்குப்பத்தைச் சேர்ந்த பிரேம் குமார், விக்னேஷ்க்கு நண்பர்.  ராதிகாவின் ஊருக்கு வரும்போதெல்லாம், பிரேமுடன் விக்னேஷ் ஒன்றாக சுற்றுவதுண்டு, இந்த சந்தர்ப்பத்தில், 6 மாதத்திற்கு முன்பாக பிரேம் குமார்,  விக்னேஷின் நண்பனின் தங்கையை காதலித்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டதாக  கூறப்படுகிறது.

அதில் தலையிட்ட விக்னேஷ் பிரேமிடம் இருந்து நண்பனின் தங்கையை மீட்க உதவி இருக்கிறார்.இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தால் பழவாங்க நினைத்த பிரேம் திட்டமிட்டு, ராதிகா குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவுகள் போட்டுள்ளார். இதனை சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் மனமுடைந்த  ராதிகா, வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தனது காதலியின் சடலத்தைப் பார்த்து மனம் நொந்த விக்னேஷ், தன்னால் தான் இந்த நிலை ஏற்பட்டது என்ற குற்ற உணர்வில்,  வடலூர் அருகே உள்ள தோப்பு ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பிரேம் குமாரின் வீட்டில் நுழைந்த போது அங்கு யாரும் இல்லாத கோபத்தில் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர் மேலும் 

பிரேம் குமார் மற்றும் அவனது பெற்றோர் தலைமறைவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.பிரேம் குமாரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ராதிகாவின் உறவினர்கள் விருத்தாசலம் கடலூர் சாலையில்  மறியலில் ஈடுபட்டுள்ளனர், 

பிரேம் குமாரை கைது செய்வதாக போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது கூட்டத்தில் கல் வீச்சு துவங்கியது, இதனால் செய்தியாளர் ஒருவருக்கு தலையில்  பலத்த காயம் ஏற்பட்டது. நிலையை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இது குறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.