ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் தான் காதலித்து வந்த உறவுக்கார ஆணுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் அவர்களை பிடித்த ஊர் பொதுமக்கள் நடுரோட்டில் வைத்து தாக்கியுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் வெட்டவெளியில் ஊரே பார்க்க பிரம்பால் விளாசப்பட்ட இளம் சிறுமி! பதற வைக்கும் காரணம்!

ஆந்திர மாநிலம் அனந்பூர் மாவட்டத்திலுள்ள கே .பி டோடி பகுதியை சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ஒருவர் அதே பகுதியில் உள்ள தனது உறவுக்கார ஆணுடன் பழகியுள்ளார். இந்நிலையில் முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பிறகு காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஊரைவிட்டு ஓட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இருவரையும் கையும் களவுமாக பிடித்த ஊர் பொதுமக்கள் அவர்களை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அதில் முதியவர் ஒருவர் ஒரு பிரம்பை எடுத்து இருவரையும் தாக்கியதை படம் பிடித்த ஒருவர் சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார். அதில் அந்த முதியவர் அப்பெண்ணிடம் பல கேள்விகள் கேட்டும் அதற்கு அப்பெண் பதில் அளிக்காத நிலையில் அவரை தாக்கியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞர்களை காப்பாற்றியுள்ளனர். மற்றும் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.
இவர்களை தாக்கிய முதியவர் மற்றும் அப்பெண்ணின் பெற்றோர்கள் மீதும் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாத நிலையில் காதலர்களை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
அந்த ஆண் இளம்பெண்ணிடம் தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தால் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.