இளம் திருநங்கையை காதலித்து வாழ்க்கை கொடுத்த இளைஞன்! ஆனால் வீட்டில் மாமனாரால் ஏற்பட்ட விபரீதம்! சேலம் திகுதிகு!

சேலத்தில் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட திருநங்கைக்கு இளைஞரின் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த திருநங்கையான பூமிகா என்பவர் பரமக்குடியை சேர்ந்த அருண்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அருண்குமாரின் வீட்டார் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூமிகாவுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிகிறது. 

பரமக்குடியை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பூமிகா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகி அவர்கள் நாளடைவில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து அருண்குமார் தனது வீட்டில் சென்று பூமிகாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் நெல்லையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடித்து இருவரும் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அருண்குமாரின் வீட்டார் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சேலம் அருகே உள்ள ஜாரிகொண்டலாம்பட்டிக்கு வந்துள்ளனர். இதையடுத்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரை சந்தித்த இருவரும் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் தங்களை அதில் இருந்து காப்பாற்றும் படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அருண்குமாரின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்க கூடாது எனவும் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.இதையடுத்து அருண்குமார் மற்றும் பூமிகா ஆகிய இருவரும் வீடு திரும்பியுள்ளார்.