ஓயாமல் உறவுக்கு அழைத்த காதலன்! மறுத்ததால்..! உடலை சிதைத்து முகத்தில் ஆசிட்! மிரள வைக்கும் சம்பவம்!

காதலியை கொலை செய்து முகத்தில் ஆசிட் வீசிய கொடூர சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.


தாராபுரம் அடுத்த எல்லப்பநாயக்கன் வலசை பகுதியை சேர்ந்த சித்தாள் வேலை செய்யும் மகாலட்சுமி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாயம் ஆனார். போலீசார் நடத்திய விசாரணையில் கடைசியாக ரஞ்சிதாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்ற மேஸ்திரியுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மகாலட்சுமியுடன் கள்ளக் காதலில் ஈடுபட்டு வந்த கருப்பசாமிதான் கொலை செய்ததை கண்டுபிடித்தனர். 

இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் மகாலட்சுமி, கருப்பசாமி ஆகியோர் கடந்த ஒரு வருடமாக ஒருவிதமான புரிதலோடு (நகரங்களில் அந்தக் காதலுக்கு கெட் டூ கெதர் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்வர்) நெருங்கி வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே பிரச்சனை நிலவியதை அடுத்து கருப்பசாமியுடனான தொடர்பை துண்டித்துள்ளார் மகாலட்சுமி.

இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி பகையை மனதில் வைத்துக் கொண்டே மகாலட்சுமியை சந்தித்து சமாதானம் பேசியுள்ளார். பின்னர் தனிமையில் இருக்கலாம் என்று அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று கூடல் நகரில் உள்ள புதர் மண்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மகலாட்சுமியுடன் ஆசை தீர உல்லாசமாக இருந்துவிட்டு திடீரென மகாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் இறந்தவரின் உடல் அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக மகாலட்சுமி முகத்திலும், உடலிலும் ஆசிட் ஊற்றி எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். மகாலட்சுமியின் உடலை உடற்கூறாய்வுக்குஅனுப்பி வைத்த போலீசார் கொலையாளி கருப்பசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.