இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு வேறு பெண்ணுடன் கல்யாணம்! திருமண நாளில் மதபோதகருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தஞ்சை சம்பவம்!

தஞ்சாவூர் அருகே காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணுடன் நடக்கவிருந்த மதபோதகரின் திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.


தஞ்சையில் வங்கி ஊழியர் காலனியைச் சேர்ந்த அபிராமி என்ற பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்தார் மதபோதகரான ஸ்டான்லி ராபர்ட். 

ராபர்ட் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரியும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் தஞ்சை மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் இடம் அபிராமி புகார் அளித்தார். இந்த புகாரை விசாரிக்க கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகேஸ்வரன் உத்தரவிட்டார்.  

இதனையடுத்து ராபர்ட் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரின் பெற்றோரிடம் விசாரித்தபோது, இது பொய் குற்றசாட்டு என முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும் ராபர்ட் வீட்டில் இல்லை என்றும், எங்கே உள்ளார் என்ற விவரத்தையும் தர மறுத்துள்ளனர்.  

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அக்கம்பக்கத்தினர் விசாரித்தபோது, நீண்டகாலமாக இவர்கள் காதலித்து வந்ததாகவும், இருவரும் ஒன்றாக சுற்றித் திரிவதை பலமுறை பார்த்திருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.  

இதனையடுத்து திருமணம் நடைபெற இருந்த மண்டபத்திற்குச் சென்று ராபர்ட் மற்றும் மற்றொரு பெண்ணுக்கு திருமணம் செய்ய இருந்ததை உறுதி செய்த போலீசார் உடனடியாக திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டு, ராபர்ட் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

ராபர்ட் மற்றும் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.