காதல் கணவனின் கேவலமான ஆசை! காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் தனது காதல் மனைவி தானே கொலைசெய்துவிட்டு தற்கொலை என நாடகமாடியது அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்  ஷோயிப் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மிஸ்பா என்ற பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. மிஸ்பா தனது தாய் தந்தையுடன் இல்லாமல் பாட்டி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் முதலில் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர்.ஷோயிப் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார் விடுமுறை நாட்களில் ஷோயிப் அடிக்கடி மிஸ்பாவை பார்க்க வருவார்.

இந்நிலையில் நண்பர்களாக பழகி அவர்கள் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்த போது அவர்களது பெற்றோர்களும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மூன்று வருடமாக காதலித்து வந்த அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பெற்றோர்களின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில நாட்கள் சென்ற நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஷோயிப் அப்பெண்னை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார். பெற்றோரிடம் சென்று பணம் மற்றும் நகைகளை வாங்கி வரச் சொல்லியும் அப்ப என்னை அடித்து துன்புறுத்தி உள்ளதாக தெரிகிறது.மிஸ்பாஅடிக்கடி கோவித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு செல்லும் போது தன் கணவர் இவ்வாறு தன்னை கொடுமைப்படுத்துவதாக தன் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் அவர் தனது மகளுக்கு தேவையான பொருள்களை தன் வீட்டில் விருந்து கொடுத்து அனுப்பியுள்ளார் அதையும் வாங்கி வைத்துக்கொண்டு ஷோயிப் கொடுமை செய்துள்ளார்.

இந்நிலையில் மிஸ்பா வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென அவரது தாய்க்கு உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று செய்தி வந்தது அதிர்ச்சி அடைந்த அவரது தாய் தன் மகள் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை அவரது கணவர் தான் தன் மகளை கொன்று இருப்பார் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் புகாரை விசாரித்த காவல்துறையினர் ஷோயிபிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின்னாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.