காதல்! செக்ஸ்! கர்ப்பம்! கல்யாணம்! கர்ப்பிணி மனைவியை தவிக்கவிட்டு மாயமான காதல் கணவன்!

வரதட்சணையுடன் ஓடிப்போன காதல் கணவனை கண்டுபிடித்து தரக் கோரி இளம் மனைவி கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.


ஆந்திராவை சேர்ந்த ஹேமலதா என்ற இளம்பெண், சென்னையில் அழகு கலைஞராக பணியாற்றி வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த சிரஞ்சீவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் இருவருக்கும் அண்மையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து ஹேமா கர்ப்பம் ஆகியுள்ளார். அப்போது சிரஞ்சீவி தீடிரென மாயமானார். அத்துடன் வீட்டிற்கு வரதட்சனையாக ஹேமா கொண்டு வந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு சிரஞ்சீவி தலைமறைவானார்.

இதனை அடுத்து திருச்செங்கோட்டுக்கு சென்று தனது கணவர் வீட்டில் கணவர் குறித்து ஹேமலதா முறையிட்டார். ஆனால் அவருக்கு அங்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. இதனால் சேலம் வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.   

கர்ப்பிணியான தன்னை தவிக்க விட்டுச் சென்ற கணவனை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஹேமா கேட்டுக் கொண்டுள்ளார்.