32 வயது மாமாவுடன் காதல்! கல்யாணமான 4 நாளில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம்பெண்! அதிர்ச்சி காரணம்!

அரியலூர் மாவட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண் திருமணமான 4 நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் இவரது மகள் நிஷா 20 , அரியலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது அக்காள் கணவரின் தம்பியான துளார் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் 32 என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

தனது அக்காளுக்கு திருமணமாகி சென்றதால் நிஷா அடிக்கடி அக்காவை பார்க்க அவரது கிராமத்திற்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் அங்கு பிரகாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்ளப்போவதாக நிஷா தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் அவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை இந்நிலையில் நிஷாவை அவரது தாயார் படிக்கும் வயதில் எதற்கு காதல் எனவும் திட்டியுள்ளார். இந்நிலையில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். 

 இதையடுத்து கடந்த 11 ஆம் தேதி இருவரும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமாகி நான்கு நாட்கள் கழித்து தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளனர். இந்நிலையில் அவரது தாயார் கடுமையாக இருவரையும் திட்ட தொடங்கியுள்ளார். இதனால் மனமுடைந்த நிஷா வீட்டிற்குள் சென்று உள்ளே கதவை அடைத்துக்கொண்டுள்ளார்.

பின்னர் பலரும் கதவைத் தட்டி பார்த்தபோது திறக்காத நிலையில் உள்ளே அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதையடுத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நிஷா தூக்கில் தொங்கியபடி இறுந்துள்ளார்.

இந்நிலையில் உடனே அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகி நான்கு நாட்களில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது