காதலர்களின் தவறான உடல் சார்ந்த தேடல்! படுக்கையறை ஆகும் சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுகள்! என்ன நடவடிக்கை எடுக்கலாம்?

சென்னிமலை முருகன் கோவிலில் படிக்கட்டுகளில் அமர்ந்துக் கொண்டு சில்மிசத்தில் எல்லை மீறியதில் கடுப்பான பக்தர்கள் காதலர்களை விரட்டி அடித்த சம்பவம் அரங்கேற்றியுள்ளது.


சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பிரபலமானது , தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலுக்கு பக்தி நிமித்தமாக படையெடுப்பார்கள், மற்றொரு பக்கம் 1000 க்கும் மேலான படிகள் இருப்பதால் ஆங்காங்கே, காதல் ஜோடிகள் அமர்ந்து காதலை வளர்ப்பதும் வழக்கம் தான். 

இந்த நிலையில் நேற்று மலை அடிவாரத்தில் வழக்கம் போல , காதல் ஜோடிகள் காதலை வளர்க்க அந்த வழியாக வந்த பக்தர்கள் கண்டும் காணாமல் நகர்ந்தாலும், ஒரு சில ஜோடிகள் மிக மோசமாக எல்லை மீறி கட்டி பிடித்து முத்தமிட்டு மோசமாக நடந்து கொள்ள, கடுப்பான பக்தர்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து  அங்கு இருந்த காதல் ஜோடிகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

மேலும் முரண்டு பிடித்த ஜோடிகளை கோவில் க்கு வெளியில் வரை விரட்டி சென்று விட்டுள்ளனர். கோவில் என்றும் பாராமல் சிலர் இங்கு காதல் லீலைகளில் திளைப்பதை இப்பகுதி மக்கள் வெகுவாக குற்றம் சாடியுள்ளனர்.