அண்ணனுடன் முறை தவறிய காதல்..! கண்டுபிடித்த தாய்க்கு மகளால் ஏற்பட்ட பயங்கரம்..! திருவையாறு திகுதிகு!

அண்ணன் முறை உள்ள பையனை காதலித்ததால் எதிர்ப்பு தெரிவித்த தாயை மகளே கொலை செய்த சம்பவம் திருவையாறில் நடந்துள்ளது.


தஞ்சை மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகள் உறவுக்கார பையன் ஒருவனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மகள் காதலிப்பது ஒருவகையில் அண்ணன் முறை வரும் என்பதால் காதலிப்பதை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதை மகள் ஏற்கத் தயாராக இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மகள் காதலனுடன் ஓடிப் போக மகளை கடத்திவிட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் தாய். பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மேலும் தன்மீதான புகாரை வாபஸ் வாங்குமாறு காதலியின் தாயிடம் காதலன் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதையடுத்து தாய் இருக்கும் வரை காதலனை அடைய முடியாது என நினைத்த அந்த பெண் காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிவிட திட்டம் இட்டுள்ளார். இதையடுத்து வழக்கம்போல் தாய்க்கும் மகளுக்கும் நேற்று வாக்குவாதம் முற்ற அப்போது அங்கு இருந்த இரும்பு கம்பியால் தாயை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தாய் பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்த வந்த திருவையாறு போலீஸ் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.