இழந்த கன்னித்தன்மையை பெண்கள் மீண்டும் பெற வந்துவிட்டது ஆப்பரேசன்..! எங்கு, எப்படி தெரியுமா? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

பெரும்பாலான ஆண்களுக்கு பெண்களின் கன்னித்தன்மை மீதான சந்தேகம் எழுவதால் இழந்த கன்னித்தன்மையை மீண்டும் பெறுவதற்கு பிரத்யேக அறுவை சிகிச்சை இருப்பதாக கூறப்படுகிறது.


தாம்பத்யம் மேற்கொள்ளும்போது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்தால் கன்னித்தன்மையுடன் இருப்பதாகவும், இல்லையென்றால் அவர்கள் கன்னித்தன்மையை ஏற்கனவே இழந்துவிட்டதாகவும் பரவலாக நம்பப்படுகிறது. இதனால் திருமணம் வாழ்க்கை தடைபடுவதால் அவற்றை சரி செய்யும் பழக்கம் பெண்களிடம் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிறப்புறுப்பில் இரத்தக் கசியவில்லை என்பதற்காக அது கன்னித்தன்மையை நிரூபிக்காது என மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்ணுறுப்பில் இருக்கும் மெல்லிய ஜவ்வு போன்ற அமைப்பு தாம்பத்யம் செய்யும்போதுதான் சேதம் அடைந்து ரத்தம் வரும் என்பதில்லை. பெண்கள் ஓடும்போதும், வாகனங்களை இயக்கும்போதும், கடினமான பணிகளை செய்யும்போதும் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்தில் மொராக்கோ நாட்டை சேர்ந்த அங்கு ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட தந்தை மகள் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். பெண்ணின் ஜவ்வு கிழிந்துள்ளதால் அவள் கன்னித்தன்மையை இழந்துவிட்டதாக கருதி அவரை கொலை செய்ய முயன்றுள்ளார்.

சமூகத்திற்கும், உறவுகளுக்கும் பயந்து சட்டவிரோதமாக பெண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்வதாகவும், அதற்க சில மருத்துவர்கள் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு மனரீதியான, உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சிகிச்சை செய்யும்போது மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.