தினகரனுக்குத் திகார்! பரிசுப் பெட்டிக்கு டெபாசிட் போச்சு! டென்ஷனில் சசிகலா!

கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி என்றால் அது தினகரன்தான்.


எப்படியெல்லாம் பேசினார் தினகரன். அ.தி.மு.க.வை கொண்டுவந்து அ.ம.மு.க.வில் இணைக்கலாம் என்றெல்லாம் தெனாவெட்டாகப் பேசினார். 

அதுவும் தினகரன் சென்ற இடத்தில் எல்லாம் என்னா கூட்டம்? எல்லாமே கூட்டிவந்த கூட்டம் என்று சொன்னாலும் நம்புவதற்கு ஆட்கள் இல்லை. அந்த அளவுக்கு தனக்கு மட்டும்தான் வெற்றி என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதுமட்டுமின்றி சும்மா இருந்த சசிகலாவையும் உசுப்பிவிட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வெளியே வருவதற்காக பரோலுக்கு அப்ளை செய்யச் சொன்னார். 

அதாவது, அ.ம.மு.க. 15 இடைத்தேர்தல்களிலும், 10க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெறுமாம். அப்படி ஒரு சூழல் ஏற்படும்போது அ.தி.மு.க. அப்படியே தினகரன் காலில் வந்து விழுந்துவிடுமாம். அதனால் தினகரன் பதவி ஏற்பதை சசிகலா பார்க்க வேண்டும் என்றுதான் வெளியே வரச் சொன்னார்.

அதேபோன்று மத்தியிலும் தொங்கு நாடாளுமன்றம்தான் அமையும், தினகரனின் 10 சீட்டுகளை நம்பித்தான் மத்திய அரசு இருக்கும். அதனால், தினகரன் சொல்பவர்தான் பிரதமர் என்று பில்டப் கொடுத்தார். இவர் சொன்னதை நம்பித்தான் சசிகலாவும் பரோலுக்கு அப்ளை செய்தது.

ஆனால், தினகரன் சொன்னது எல்லாமே வீணாப் போச்சு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் மோதவேண்டிய தினகரன் கடைசியில் கமல்ஹாசனுடனும், நாம் தமிழருடனும் கட்டி உருண்டார். எல்லா டெபாசிட் பணமும் காணாமப் போச்சு.

இப்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்துவிட்டதால், இனியும் தினகரனை சும்மா விட்டுவைக்க வழியேஇல்லை.

அவர் மீது ஏற்கெனவே ஆயிரத்தெட்டு வழக்கு இருப்பதால், இன்னும் சில நாட்களிலேயே தூசு தட்டப்பட்டு, நேரடியாக திகாருக்கு தினகரனி அனுப்ப வேலைகள் ஆரம்பமாகுமாம். இதைக் கேள்விப்பட்டு சசிகலா டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார். பணமும் போச்சு, மானமும் போச்சு, கட்சியும் போச்சு என்று கலங்குகிறார் சசி.

பாவமா இருக்கே...