பாய்ந்து வந்து பேருந்து மீது பயங்கர வேகத்தில் மோதிய லாரி! நள்ளிரவு பயங்கரத்தில் 3 பேர் துடிதுடித்து பலி! கிருஷ்ணகிரி பரபரப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநர், நடத்துனநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.


சூளகிரி அருகே அரசுப் பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 34 பயணிகள் காயமடைந்தனர். அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலையிலிருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அதே சமயம் சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் என்ற இடத்தில் இருந்து சரக்கு லாரி ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது.

சாம்பல் பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகள் காயம் அடைந்தனர். 

இதில் அரசுப் பேருந்து மற்றும் சரக்கு லாரியின் முன்புறம் சேதமடைந்தன.விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரக்கு லாரியை ஓட்டிவந்தது சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த இளவரசன் என்பது தெரியவந்தது. அவருடன் லாரி உதவியளராக சாய்பாபா என்பவரும் வந்துள்ளார். விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம் புதுச்சேரி முருகம்பாக்கத்தைசேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வீரசாமிக்கு சொந்தமானனது என்பது தெரியவந்துள்ளது. 

அரசு பேருந்து ஒன்று திருவண்ணாமலையிலிருந்து ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அதே சமயம் சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் என்ற இடத்தில் இருந்து சரக்கு லாரி ஒன்று எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. சாம்பல் பள்ளம் என்ற இடத்தில் வந்தபோது லாரியின் டயர் திடீரென வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. அதிகாலை 4 மணியளவில் நிகழ்ந்த இந்த விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 34 பயணிகள் காயம் அடைந்தனர்.

இதில் அரசுப் பேருந்து மற்றும் சரக்கு லாரியின் முன்புறம் சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சரக்கு லாரியை ஓட்டிவந்தது சென்னை காட்டுப்பாக்கத்தை சேர்ந்த இளவரசன் என்பது தெரியவந்தது. அவருடன் லாரி உதவியளராக சாய்பாபா என்பவரும் வந்துள்ளார். விபத்தில் சிக்கிய சரக்கு வாகனம் புதுச்சேரி முருகம்பாக்கத்தைசேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர் வீரசாமிக்கு சொந்தமானனது என்பது தெரியவந்துள்ளது.