ஒரே குடும்பத்தின் 8 பேர் பலி! படுவேக கார்! பாதை மாறி வந்த லாரி! கோர விபத்து!

ஆக்ராவிற்க்கு செல்லும் வழியில் இன்று காலை சரக்கு லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்ரா நோக்கி காரில் 3 பெண்கள் மற்றும் 13 வயது சிறுமி உட்பட  ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சென்றுள்ளனர். இவர்கள் அனைவருமே காதல் சின்னமான தாஜ்மஹாலை காணச் சென்று கொண்டிருந்தனர். 

காலை 9 மணியளவில் கார் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை அருகில் வந்த போது லேன் மாறி எதிரில் வேகமாக  சரக்கு லாரி ஒன்று வந்துள்ளது. இதனை காரில் வந்தவர்கள் உடனடியாக கவனிக்க முடியவில்லை. மேலும் கார் வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தினால் உடனடியாக பிரேக் பிடிக்க முடியவில்லை.

இதனால் லாரியுடன் நேருக்கு நேராக மோதியதில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரழந்தனர். மிக கொடூரமாக நேர்ந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர், அருகில் உள்ள அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்றனர். ஆனால் அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இது குறித்த தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து பலியானவர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்க்கு காரணமான லாரி ஓட்டுநர், சம்பவ இடத்தில் இருந்து உடனடியாக தப்பியதால் ,இது குறித்த வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் நீரஜ் (வயது 25), அனிதா (வயது 30), விஷ்ணு(25), கருணா (22) மற்றும் சுரேஷ்  (25) உள்ளிட 5 பேர் விவரம் உறுதியானதை அடுத்து 13 வயது சிறுமி குறித்த விவரம் இன்னும் கிடைக்கவில்லை என காவல்த்துறை சார்பில் தகவல் வெளிகியுள்ளது.