நெல்லை கோர விபத்து! தந்தை, 3 வயது மகள் என 5 பேர் பலி!

நெல்லையில் அதிகாலை லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.


திருநெல்வேலியில் இருந்து இன்று அதிகாலை குற்றாலம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. உறவினர் வீட்டு திருமண விருந்துக்கு இறைச்சி வாங்க அந்த காரில் ராஜசேகர் என்பவர் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

கரும்புலியூத்து என்ற இடத்திற்கு அருகே கார் சென்றபோது தென்காசியில் இருந்து வந்த சரக்கு லாரி மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் காரானது லாரிக்கு அடியில் சென்று நசுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட 5 பேர்  உயிரிழந்தனர். 

காருக்குள் இருந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. லாரிக்கு அடியில் சிக்கிய காரை மிகுந்த போராட்டத்திற்கு இடையே மீட்டு உடல்களை போலீசார் மீட்டனர்.