ஒரே சாலையில் அதி வேகம்! நேருக்கு நேர் மோதி சிதைந்த பஸ் - லாரி! பயணிகளின் நிலை? திருப்பூர் கோரம்!

தாராபுரம் அருகே பஸ் லாரி நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.


இன்று அதிகாலை தேனியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது, தாராபுரத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி நேருக்கு நேர் மோதியதால் கடும் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து ஆனது அதிகாலை 6 மணி அளவில் ஐஸ்வர்யா நகர் அருகே நேர்ந்துள்ளது. விபத்து நடந்த சத்தம் கேட்டவுடன் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சிலர், விபத்து நேர்ந்த இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவினர்.

சிறு காயங்களுடன் தப்பியவர்கள் அருகில் இருந்த தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

படுகாயமடைந்த பேருந்து டிரைவர் மற்றும் லாரி டிரைவர் உட்பட 13 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார், விபத்து குறித்த ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதிகாலையிலேயே விபத்து நேர்ந்தால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளானது.