என் அப்பாவுக்கு நேர்ந்த அதே இடத்தில்..! துடிதுடித்து இறந்த மனைவி, மகள்! கதறிய கணவன்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

குழந்தையை பள்ளி வாகனத்தில் அனுப்புவதற்காக அழைத்துச்சென்ற வாகனத்தின் மீது லாரி மோதியதில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் யஸ்வந்த் மற்றும் இன்சிகா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தம்பதிகள் இருவரும் மின்வாரிய துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 

சித்ரா, தினமும் காலை குழந்தைகளை பள்ளிகளில் ஏற்றிவிடுவது வழக்கம். அதே போல, இன்று காலை மகன் யஷ்வந்தை பள்ளி வேனில் ஏற்றிவிட்ட பிறகு, மகளை அழைத்துக்கொண்டு வேனில் ஏற்றி விடுவதற்காக நெடுஞ்சாலையில் சித்ரா சென்று உள்ளார். அப்போது இவரின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே மகளும், சித்ரா உயிரிழந்துள்ளனர். 

இந்த சம்பவம் அறிந்த கணவர் ஜெயக்குமார் அதே இடத்திலேயே கதறி அழுதுள்ளார். இந்த விபத்து நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் சித்ராவின் அப்பா இதே இடத்தில் விபத்துக்குள்ளாகி தற்போது மருத்துவமனையில் கோமாவில் இருக்கிறார். 

தற்போது மனைவி மற்றும் மகளை இழந்துள்ளதால் ஜெயக்குமார் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.