இளம் பெண்ணின் மூக்கில் தோன்றிய சிறிய ஓட்டை..! ஹாஸ்பிடல் சென்றவரிடம் டாக்டர் கூறிய அதிர வைக்கும் தகவல்..! என்ன தெரியுமா?

லண்டன்: மூக்கை அரிக்கக்கூடிய புற்றுநோய் பாதித்த பெண், மருத்துவ சிகிச்சைக்கு போராடி வருகிறார்.


பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷைர் பகுதியை சேர்ந்தவர் மாண்டி பொலார்ட் (37 வயது). குழந்தை, கணவருடன்  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவருக்கு, மூக்கின் நுனியில் ஒரு விநோத அறிகுறி இருந்துள்ளது. அவ்வப்போது இரவு நேரங்களில் மூக்கில் இருந்து ரத்தம் வடிவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.

இதன்பேரில் மருத்துவ பரிசோதனை செய்த மாண்டிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி செய்தி கிடைத்தது. ஆம், அவருக்கு வந்திருப்பது மூக்கில் புற்றுநோய் என்றும், அது படிப்படியாக மூக்கில் உள்ள சதையை அரித்து தின்பதால் விரைவிலேயே செயற்கை மூக்கு பொருத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.  

விளையாட்டாக, மூக்கு அரிப்பது போன்று இருந்தபோதெல்லாம் சொறிந்தபடி மற்ற வேலையை பார்க்கச் சென்றுவிட்ட மாண்டி தற்போது புலம்பி தள்ளுகிறார். உடலில் ஏற்படும் எந்த சின்ன விசயத்தையும் தள்ளிப்போடாமல் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள், என பார்ப்பவரை எல்லாம் அறிவுறுத்த தொடங்கியுள்ளார்.

தற்போதைய சூழலில் அவரது மூக்கின் நுனியில் இருந்து கட்டி அகற்றப்பட்டு அந்த இடத்தில் உடலின் வேறொரு பகுதியில் இருந்து சதையை எடுத்து பொருத்த மருத்துவர்கள் பரிசீலித்து வருகின்றனர்.