வடமாநில மார்வாடிகள் கடைக்கு இரவோடு இரவாக பூட்டு..! உடனடியாக வெளியேறவும் மிரட்டல்! தஞ்சை, புதுக்கோட்டை திகில்!

தமிழக தேசிய கட்சி சார்பில் தமிழர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வெளிமாநில மார்வாடிகளின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர்


புதுக்கோட்டை நகர பகுதிகளில் அதிக அளவில் வெளி மாநிலத்தில் இங்கே வந்து எலக்ட்ரிக் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள் . செல்போன் கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை புதுக்கோட்டை நகர பகுதிகளில் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.


இந்நிலையில் தமிழக தேசிய கட்சி சார்பில் வெளிமாநில கொள்ளை கூட்டம் தமிழர்களின் வேலை வாய்ப்பை பறிக்காதே வட அதில் இருந்து இங்கு வந்து தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்காதே தமிழ்நாட்டில் வெளி மாநிலத்துவரை இறக்குமதி செய்யாதே என்ற துண்டு பிரசுரங்களை கடைகளில் ஒட்டி கடைகளுக்கு பூட்டு போட்டு சென்றுவிட்டனர்.


புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் 5க்கும் மேற்பட்ட கடைகளுக்கு பூட்டு போட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது கடைகளுக்கு பூட்டுப் போட்டு யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.