சென்னை, மதுரைக்கு மட்டும்தான் லாக் டவுனா..? மருத்துவக் குழுவின் ஆலோசனை என்ன தெரியுமா?

மருத்துவக் குழுவின் ஆலோசனையைக் கேட்டு, ஊரடங்கு குறித்து அறிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.


அதன்படி, இன்று மருத்துவக் குழுவினர் முதல்வரை சந்தித்தார்கள். எடப்பாடியிடம் என்ன பேசினார்கள் என்பது குறித்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

இப்போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு காரண, சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அதிகரித்துள்ளது. 

மேலும், இதற்காக ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஏனென்றால் ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாகாது, அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர். 

மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளுக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளுக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.

திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது.

அதனால் காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம். சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது. அதனால், பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், சென்னை, மதுரைக்கு மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்பதுதான் தற்போதைய செய்தி.