உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் அறிவிப்பாங்களாம்! ஆனா, தேர்தல் நடக்காதாம்! சொல்றது ஓர் அமைச்சருங்கோ!

சமீபத்தில் தமிழக அமைச்சர் ஒருவரை சந்தித்துப் பேசியபோது, ‘உள்ளாட்சித் தேர்தல்’ குறித்து சில தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார்.


அதாவது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முன்வரும், ஆனால் நடக்காது என்று சொல்கிறார். கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆணையிட்டார் ஜெயலலிதா. தி.மு.க. இட ஒதுக்கீடு குறித்து கோர்ட்டுக்குப்போகவே கடந்த மூன்று ஆண்டுகளாக இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தொடர்ந்து நீதிமன்றத்தில் நடத்த தயாராக இருப்பதாகவே தமிழக அரசு கூறிவந்தது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த தமிழகத் தேர்தல் ஆணையம், வரும் அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவித்துவிடுவோம் எனத் தெரிவித்திருந்தது. அதனால் நிச்சயம் தேர்தல் அறிவிப்பு செய்தே தீரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.

ஆனால், தேர்தல் நடக்காது என்பதிலும் அந்த அமைச்சர் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால், இன்றைய நிலையில் தி.மு.க. கூட்டணி பலமாக இருக்கிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் அந்தக் கூட்டணியே வெல்வதற்கு வாய்ப்பு உண்டு. இது, மனதளவில் சட்டமன்றத் தேர்தலுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும். 

அதனால்தான் இப்போது தீடீரென ஏராளமான மாவட்டங்கள் உதயமாகியுள்ளன. இந்த புதிய மாவட்டப்படியே தேர்தல் நடத்தவேண்டும் என்று எல்லை பிரச்னைக்கு யாரேனும் நிச்சயம் நீதிமன்றம் போவார்கள். அதனால் தேர்தல் நிறுத்தப்படும் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

நல்லா வருவீங்கப்பா...