பசித்தாலும் புலி புல்லை திங்காது..! ஆனால் புல்லை ருசித்து சாப்பிடும் சிங்கம்! வைரல் வீடியோ! ஏன் தெரியுமா?

சூரத்: சிங்கம் ஒன்று புல் தின்னும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


குஜராத் மாநிலம், கிர் வனப்பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக, புலி, சிங்கம்  போன்றவை இறைச்சி இல்லாமல் இருக்க முடியாது. இதுதவிர, புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனப் பழமொழி சொல்வதும் உண்டு.

இருந்தாலும், புலி, சிங்கம் போன்ற வனவிலங்குகள் சில மருத்துவ காரணங்களுக்காக, தாவர வகைகளை உண்பது வழக்கம். இதை நிரூபிக்கும் வகையில் கிர் வனப்பகுதியில் சிங்கம் ஒன்று புல் மேயும் காட்சி வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள் ளது. இதனை பலரும் கிண்டல் செய்து கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

அதேசமயம், சிங்கம் போன்ற வனவிலங்குகள் புல், கீரை வகைகளை சாப்பிட்டு வயிற்றை சுத்தப்படுத்துவது வழக்கம். அதுபோலத்தான் இந்த சிங்கமும் புல் சாப்பிடுவதாக, ஒரு சிலர் பதிவிடுகின்றனர். இதற்கிடையே இந்த வீடியோ ஊடகங்களில் வைரலாகி வருகிறது.