கிவி பழத்தின் மகிமை தெரியுமா?

சீனத்து நெல்லிக்கனி என்று சொல்லப்படும் கிவி பழம் உடல் நலத்திற்கு மட்டுமின்றி மனநலத்திற்கும் நல்லது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாவதால் விலை அதிகம் என்றாலும் அதற்கேற்ப சத்துக்கள் நிரம்பியுள்ளன.


·         கிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவான அளவில்  உள்ளதால் உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்றது.

·         வைட்டமின்சிஅதிக அளவில் உள்ளதால் நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. முதுமைக் கால கண் நோயைத் தடுக்கும் தன்மையும் கொண்டது.

·         கிவியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால் இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவுகிறது. மாரடைப்பைத் தடுக்கவும் உதவுகிறது.

·         குழந்தைகளின் ஆற்றலையும் மூளையைத் தூண்டும் சத்துக்களும் கிவியில் நிறைந்திருப்பதால், சின்ன வயதினருக்குக் கொடுப்பது மிகவும் நல்லது.