10 வருட காதல் போராட்டம்! பெற்றோர் சம்மதத்துடன் இணைந்த ஓரினச்சேர்க்கை ஜோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மேகலா, வெளி நாட்டில் தங்கி படித்து வந்தார், அமெரிக்க டெக்ஸ் பகுதியை சேர்ந்த தனது தோழியுடன் மிக நெருக்கமாக பழகிவந்தார்.


அவருடனான நட்பின் நெருக்கம் அதிகரிக்க காலப்போக்கில் அது ஓரின சேர்க்கைக்கு வழிவகுத்துள்ளது, இவர்கள் ஒன்றாக இருப்பது மற்றும் எல்லை மீறுவதை அறிந்து கொண்ட இவர்களது பெற்றோர் ,சுதாரித்துக் கொண்டு இருவரையும் எச்சரித்தும் கேட்காமல் , ஒன்றாக இருக்க ஒரு கட்டத்தில் இருவரையும் பிரித்து வைத்து விடுகின்றனர். பிரிவை தாங்கிக் கொள்ள முடியாமல்,

தனிமையில் தவித்து வந்த காதல் ஜோடி பின்னர் கிடைத்த பேருந்தில் நேரம் காலம் இல்லாமல் பக்கம் பக்கமாக உட்கார்ந்து பயணிக்க துவங்கினர், மேலும் பெற்றோர் எதிர்ப்பு இவர்கள் காதலை வலுப்படுத்த,இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்கின்றனர், இதற்கிடையில் கேன்ஸர் நோயினால் மேகலா பாதிக்கபட, தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவரை மீட்டு வந்த காதல்,

இப்படியே 10 வருட காலம் ஓடிப்போக இருவரது மனதையும் புரிந்து கொண்ட பெற்றோர் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க, அவர்களது திருமணம் கோலாகலமாக நடக்க, சந்தோஷமாக வாழ்க்கையின் உள்ளே கால் எடுத்து வைத்துள்ளனர்