வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்குக் காரணம் லியோனிதான்..! எடப்பாடி பழனிசாமியும் அதிரடி குற்றச்சாட்டு. அடுத்த கைது லியோனியா?

இன்று சட்டப்பேரவையில் வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.


வண்ணாரப்பேட்டை அருகே அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறையினர் விளக்கம் கொடுத்தனர். ஆனால், போலீஸார் அறிவுறுத்திய பிறகும், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், காவல் துறையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், போலீஸார் மீது கல், பாட்டில் வீசப்பட்டது. காவலர்கள் மீது தாக்குதல் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் சிலரை தூண்டிவிட்டு காவலர்கள் மீது கல்வீசச் செய்தனர். அதனால் காவலர்கள் காயம் அடைந்தனர். 70வயது முதியவர் தற்செயலாக இறந்ததை போராட்டத்துடன் தொடர்புபடுத்தி பேசினார்கள்.

போராட்டத்தை முடித்துக்கொண்டு கலைந்து செல்லுமாறு காவல் துறை சொன்னபிறகும் அவர்கள் கலைந்துசெல்லவில்லை. அதனால் கைது செய்யப்பட்டவர்கள் ரகளை செய்த காரணத்தாலே தடியடி நடத்தப்பட்டது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்தார்.

இந்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு செய்தார்கள். இந்த நிலையில், போராட்டத்துக்குக் காரணம் லியோனிதான் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

வண்ணாரப்பேட்டையில் லியோனி பொதுக்கூட்டம் நடத்திய பிறகுதான், அங்கு போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. தமிழக பட்ஜெட் சிறப்பாக இருப்பதை பொறுக்க முடியாமல் போராட்டத்தை தூண்டியுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது மீண்டும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. அப்படின்னா லியோனியும் கைது செய்யப்படுவாரோ..?